பலாலி இராணுவ முகாமில் கடமை புரியும் இராணுவ வீரர் திடீரென உயிரிழப்பு!

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணம் பலாலி இராணுவ முகாமில் கடமை புரியும் இராணுவ சார்ஜன்ட் ஒருவர் இன்று திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார்.

குருணாகல் மாவட்டத்தை சேர்ந்த றதித்த ரங்கன திசாநாயக்க (வயது 31) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது, இதன்போது பலாலி இராணுவ வைத்தியசாலையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்றையதினம் உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

மாரடைப்பு காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.