
பலாங்கொடை ஹட்டன் வீதியில் விபத்து: 7 பேர் காயம்
பலாங்கொடை ஹட்டன் வீதியில் இடம்பெற்ற விபத்தில் 7 பேர் காயமடைந்துள்ளனர்.
பலாங்கொடை பின்னவல பிரதேசத்தில் 7 பேரை ஏற்றிச் சென்ற வேன் குன்றின் மீது மோதியே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
சிவனொளிபாத மலையில் இருந்து விரகெட்டிய பகுதிக்கு சென்று கொண்டிருந்த குழுவினரே இவ்விபத்தில் சிக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து தொடர்பில் பலாங்கொடை பின்னவல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
