பலாங்கொடை மண்சரிவில் காணாமல் போன நால்வரை தேடும் பணி தீவிரம்

-பதுளை நிருபர்-

 

பலாங்கொடை மண்சரிவில் காணாமல் போன நால்வரை தேடும் பணியை இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் பொதுமக்கள் இணைந்து காலை முதல் முன்னெடுத்துள்ளனர்.

பலாங்கொடை – கவரன்ஹேன – வெயின்தென்ன பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி நால்வர் காணாமல் போயுள்ளனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய்இ தந்தைஇ இரண்டு பிள்ளைகளே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.