பலஸ்தீனத்துக்கு உதவி அனுமதிக்கப்பட்டால் மாத்திரமே போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்குத் தயார்- ஹமாஸ்

பலஸ்தீனப் பகுதிக்குள் போதுமான உதவி அனுமதிக்கப்பட்டால் மாத்திரமே, காசா போர் நிறுத்தம் தொடர்பில் பேச்சுவார்த்தை திரும்பத் தயாராக இருப்பதாக ஹமாஸ் அறிவித்துள்ளது.

காசாவில் பொதுமக்கள் பட்டினியால் இறக்கின்றனர், உதவி விநியோக தளங்களில் இஸ்ரேலிய துப்பாக்கிச் சூட்டை அவர்கள் எதிர்கொள்கின்றனர் என ஹமாஸ் சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த வாரம் கட்டாரில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளிலிருந்து அமெரிக்காவும் இஸ்ரேலும் விலகிக்கொண்டன.நம்பிக்கையின்மையுடன் ஹமாஸ் பேச்சுவார்த்தை நடத்தியதாகக் குற்றம் சுமத்தியே இரண்டு நாடுகளும் பேச்சுவார்த்தையில் இருந்து விலகிக்கொண்டன.

இந்நிலையில் மத்திய கிழக்குக்கான, டொனால்ட் ட்ரம்பின் விசேட தூதுவர் ஸ்டீவ் விட்காஃப் நேற்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சந்தித்துள்ளார் .

இதேநேரம் விட்காஃப் மற்றும் இஸ்ரேலுக்கான அமெரிக்கத் தூதுவர் மைக் ஹக்காபி இன்று காசாவுக்குச் செல்வார்கள் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

சர்ச்சைக்குரிய அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆதரவு பெற்ற காசா மனிதாபிமான அறக்கட்டளையால் நடத்தப்படும் உதவி விநியோக தளங்களை அவர்கள் ஆய்வு செய்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ள