பலப்பிட்டி நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் துப்பாக்கி சூடு

பலப்பிட்டி நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் இன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் அம்பலாங்கொட பாடசாலையின் பிரதி அதிபர் காயமடைந்துள்ளதுடன் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

44 வயதுடைய ஒருவரே இவ்வாறு காயமடைந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர் பிரபல குற்றவாளி கொஸ்கொட சுஜியின் உறவினர் என இலங்கை பொலிஸார் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்ட நபர் வீதியில் பயணித்த போது மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு துப்பாக்கிதாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவா தெரிவித்தார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்