பற்கள் பற்றிய தகவல்கள்
🔷மனித உடலில் பற்கள் மிகவும் முக்கியமான அங்கமாகும். பற்கள் தான் முகத்திற்கு நல்ல அமைப்பைத் தருகிறது மற்றும் உண்ணும் உணவுகளை மெல்லவும், தெளிவாக பேசவும் உதவுகின்றன. பலரும் தங்களின் பற்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. பற்கள் சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் இருந்தால் தான், ஒட்டுமொத்த உடலும் ஆரோக்கியமாக இருக்க முடியும். உடலுக்கு வேண்டிய சத்துக்களை உணவுகளின் மூலமே பெற முடியும். அந்த உணவுகளை வாயின் வழியாகவே உடலுக்குள் செலுத்த முடியும். எனவே அப்படிப்பட்ட வாய் மற்றும் அதில் உள்ள பற்களை வலுவாவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
🔷நிறைய பேருக்கு தங்களின் பற்களைப் பற்றிய சில விஷயங்கள் தெரிவதில்லை. அந்தவகையில் பற்களைப் பற்றிய சில சுவாரஸ்யமான உண்மைகள் என்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
⭕குழந்தைகள் பிறக்கும் போது பற்களுடன் பிறப்பதில்லை. ஆனால் பற்களானது வயிற்றில் இருக்கும் போதே உருவாகத் தொடங்கும். ஆனால் இந்த பற்கள் வளர்ந்து வெளியே தெரிவதற்கு 6 முதல் 12 மாதங்கள் ஆகும்.
⭕மனித உடலிலேயே பற்களில் உள்ள எனாமல் தான் மிகவும் கடினமான பொருள். ஏன் இது நமது எலும்புகளை விட மிகவும் கடினமானது. பற்களின் எனாமலில் காணப்படும் மிகவும் முக்கியமான கனிமப் பொருள் ஹைட்ராக்ஸிபடைட் ஆகும்.
⭕அனைவருக்குமே பற்கள் நேராக இருக்காது. சிலருக்கு பற்கள் வளைந்து கொண்டும், வெளியே நீட்டிக் கொண்டும் இருக்கும். இப்படி வரிசையாக இல்லாத பற்களை பிரேஸ்கள் மூலம் நேராக்க முடியும். இந்த ஆர்த்தோடோன்டிக் சிகிச்சையில் பற்களில் மென்மையாக அழுத்தத்தைக் கொடுத்து, பற்களை படிப்படியாக நேராக்குகின்றன.
⭕எப்படி நமது கைவிரல் ரேகைகள் ஒவ்வொருவருக்கும் வேறுபட்டிருக்குமோ, அதேப் போல் தான் ஒவ்வொருவரின் பற்களும் தனித்துவமானது. எனவே கைவிரல் ரேகைகளை அடுத்து, ஒருவரின் பற்களைக் கொண்டும் அடையாளம் காண முடியும்.
⭕ஒருவர் நன்கு தெளிவாக பேசுவதில் பற்கள் முக்கிய பங்கை வகிக்கின்றன. குறிப்பாக முன் பற்கள் தான் குறிப்பிட்ட மற்றும் முக்கியமான ஒலிகளை உருவாக்குவதற்கு உதவுகின்றன.
⭕தினமும் இரண்டு வேளை பற்களைத் துலக்குவதோடு, பற்களின் இடுக்குகளில் உள்ள உணவுத் துகள்களை நீக்குவது, சீரான இடைவெளியில் பல் மருத்துவரை அணுகி பற்களின் ஆரோக்கியத்தை சோதிப்பது போன்ற வழக்கங்களைக் கொண்டிருந்தல், சொத்தை பல், ஈறு நோய்கள் மற்றும் பிற பல் தொடர்பான பிரச்சனைகளைத் தடுக்கலாம்.
⭕மோசமான வாய் ஆரோக்கியம் இதய நோய், சர்க்கரை நோய் மற்றும் அல்சைமர் நோய் போன்ற பல ஆரோக்கிய பிரச்சனைகளுடன் தொடர்புடையது. எனவே ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்க வேண்டுமானால் வாய் சுகாதாரம் மற்றும ஆரோக்கியத்தை பராமரிப்பதில் அதிக கவனத்தை செலுத்த வேண்டியது முக்கியம்.
⭕மொத்தத்தில், பற்கள் நமது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திலும் முக்கிய பங்கை வகிக்கிறது. எனவே வாயின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பழக்கங்கள், பற்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுகளை உட்கொள்வதோடு, பல் மருத்துவரை அவ்வப்போது அணுகி சோதனை செய்து வந்தால், பற்கள் நீண்ட ஆண்டுகள் ஆரோக்கியமாகவும், வலுவாகவும் இருக்கும்.
பற்கள் பற்றிய தகவல்கள்
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்