பறக்கும் 2 கிலோ தங்க பருந்து!

நகை என்றாலே பெண்களுக்குத்தான் என்ற காலமெல்லாம் மலையேறிவிட்டது. இருபாலினருமே தற்போது ஆடை ஆபரணத்தில் விருபத்துடனே இருக்கின்றனர். அந்த வகையில் தெலங்கானாவில் ஒருவர் தனது கழுத்தில் 2 கிலோ தங்கத்தை அணிதிருப்பதை அவரது தனித்துவமான ஸ்டைலாக பின்பற்றுகிறார்.

இந்தியா – வாரங்கல் கழுகு பிரவீன் நரேட்லா என்று அழைக்கப்படும் நரேட்லா பிரவீன் குமார். தெலுங்கானா மாநிலம் வாரங்கலில் பிறந்த இவர் தற்போது காசிபுக்கா பகுதியில் வசிக்கிறார். கழுத்தில் பறக்கும் பருந்தின் உருவத்தை தங்கத்தில் செய்து அதை அணிந்துள்ளார். இது இவரது அடையாளமாகவே மாறிப் போய் உள்ளது. அந்த நகையின் கீழ் ஒரு தாயத்தும் உள்ளது.

புதிதாக யாராவது இவரை பார்த்தாலே இங்கு ஏதோ சினிமா ஷூட்டிங் நடக்கிறது போல, இவர் ஒரு நடிகர் போல என்றே மக்கள் சந்தேகம் கொள்வார்கள். ஆனால், இவர் யார் என்ற உண்மை தெரிந்ததும் இப்படி ஒரு ஆடம்பரமான மனிதனும் இருக்கிறானா என்று மக்கள் அதிர்ச்சியடைகிறார்கள்.

பிரவீன் குமாருக்கு 40 வயதாகிறது. திருமணமாகி மூன்று குழந்தைகளுக்கு தந்தையாக இவர் இருந்தாலும், தனது ஃபேஷன் உணர்வால் மிகவும் இளமையாக இருப்பதாக உணர்கிறார். இவர் தனது ஊரில் மிகவும் பிரபலமானவர்.

சிறுவயதில் இருந்தே பருந்துகள், புலிகள் மற்றும் சிங்கங்கள் பிடிக்கும் என்று பேட்டி ஒன்றில் பகிர்ந்து கொண்டார். கருடபுராணத்தில் இந்தக் குறிப்பிட்ட வடிவத்தை குறித்து கேட்டு பிடித்துபோகவே இதை அணிய வேண்டும் என்ற ஆசை இவருக்கு வந்துள்ளது.

தனது ஸ்டைல் தாய், தந்தையர்க்கு பிடிக்கவில்லை, அவர்கள் பாராட்டவில்லை என்கிறார் இவர். ஆனால் தனது மனைவி மற்றும் குழந்தைகளுக்கு இது பிடிப்பதாக தெரிவிக்கிறார். பொது நிகழ்வுகள், திருமணங்கள் மற்றும் பயணங்களுக்கு மக்கள் தன்னை சிறப்பாக அழைப்பது அறிமுகப்படுத்த விரும்புவதாக அவர் கூறுகின்றார் . தனக்கு சில பட வாய்ப்புகள் வந்திருப்பதாகவும் பிரவீன் பகிர்ந்து கொண்டார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்