பருவமழை அதிகரிக்கும் சாத்தியம் – பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை

நாடு முழுவதும் வடகிழக்கு பருவபெயர்ச்சி மழை ஆரம்பமாகுவதால் மழையில் அசாதாரண அதிகரிப்பு இருக்காது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனால் பொதுமக்கள் பீதியடையத் தேவையில்லை என வளிமண்டலவியல் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.

எதிர்வரும் நாட்களில் நாட்டின் பல பகுதிகளில் வடகிழக்கு பருவமழை படிப்படியாக அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

எதிர்வரும் 4 ஆம் திகதி முதல் குறிப்பாக வடக்கு வடமத்திய கிழக்கு ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் மழை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனவே பருவமழை தீவிரமடைவதால் பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.