பருவக்காலத்தை முன்னிட்டு விசேட ரயில் சேவைகள்

பாடசாலை விடுமுறை மற்றும் சிவனொளிபாதமலை யாத்திரைக்கான பருவகாலத்தை முன்னிட்டு பயணிகளின் போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்ய மார்ச் மாதத்தில் மேலதிகமாக ரயில் சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பு கோட்டைக்கும் பதுளைக்கும் இடையிலும், கொழும்பு கோட்டைக்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலும் விசேட ரயில் சேவைகள் இயக்கப்படும்.

விசேட ரயில் சேவைகளின் பட்டியல்,

கொழும்பு கோட்டை – பதுளை மார்க்கம்

விசேட ரயில் 01 (கொழும்பு கோட்டை முதல் பதுளை வரை)

மார்ச் 12, 14, 16, 21, 23, 28, மற்றும் 31 ஆகிய திகதிகளில் இயக்கப்படுகிறது

விசேட ரயில் 02 (பதுளை முதல் கொழும்பு கோட்டை வரை)

மார்ச் 12, 14, 16, 21, 23, 28, மற்றும் 31 ஆகிய திகதிகளில் இயக்கப்படுகிறது

பதுளையிலிருந்து மாலை 5:20 மணிக்கு புறப்படும்

கொழும்பு கோட்டை – காங்கேசன்துறை மார்க்கம்

விசேட ரயில் 03 (கொழும்பு கோட்டை முதல் காங்கேசன்துறை வரை)

மார்ச் 13 முதல் மார்ச் 31 வரை தினமும் இயக்கப்படுகிறது

கொழும்பு கோட்டையிலிருந்து காலை 5:30 மணிக்கு புறப்படும்

விசேட ரயில் 04 (காங்கேசன்துறை முதல் கொழும்பு கோட்டை வரை)

மார்ச் 13 முதல் மார்ச் 31 வரை தினமும் இயக்கப்படுகிறது

புறப்படும் இடம்: காங்கேசன்துறையில் பிற்பகல் 1:50 மணிக்கு

 

Minnal 24FM Logo Minnal24 FM
LIVE
மட்டக்களப்பில் இருந்து ஒலிபரப்பாகும் வானொலி மின்னல் 24