பருத்தித்துறை பிரதேச சபை எல்லைக்குள் பொலித்தீனுக்கு தடை
-யாழ் நிருபர்-
பருத்தித்துறை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்று வெள்ளிக்கிழமை சபை தவிசாளர் யுகதீஸ் தலைமையில் அக வணக்கத்துடன் ஆரம்பமானது.
இதில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அந்தவகையில் 9 ஆம் மாதத்தினை பன விதை நடுகை மாதமாக பிரகடனப்படுத்தப்பட்டு 10000/- பனை விதைகள் நாட்டுவதென்று தீர்மானிக்கப்பட்டது.
சபை எல்லைக்குள் மூன்று மாதத்திற்குள் பொலித்தீன் பாவனையை முற்றாக கட்டுப்படுத்துவதென்று தீர்மானிக்கப்பட்டது .
சபை வீதிகளை ஊரிக்களி மண் பயன்படுத்தி அமைப்பதென்று தீர்மானிக்கப்பட்டது.
உக்காத கழிவு பொருட்களை பருத்தித்துறை பிரதேச சபைக்குட்பட்ட இடத்தில் கொட்டுவதற்கு அனுமதி கோரப்பட்ட நிலையில் மூன்று மாத காலங்களுக்கு சுழற்சி முறையில் அனுமதி கொடுப்பதாகவும் ஒரு உழவு இயந்திர பெட்டி குப்பைக்கு ரூபா 5000 அறவிடுவதாகவும் தீர்மானிக்கப்பட்டது.
இவ் சபை அமர்வில் 20 உறுப்பினர்களில் 18 உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தனர்.