பரீட்சைக்காக சிறையிலிருந்து அழைத்து வரப்பட்ட மாணவன் தப்பியோட்டம்!
கொலை மற்றும் கைக்குண்டு வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் தடுப்பு முகாமில் வைக்கப்பட்டிருந்த க.பொ.த.சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிய நிலையில், பாடசாலை மாணவன் ஒருவர் நேற்று வியாழக்கிழமை சிறை அதிகாரிகளிடமிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
தப்பிச் சென்ற குறித்த மாணவன் பாணந்துறை, தொடங்கஹவத்தையில் உள்ள பெத்மேகம பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவருகின்றது.
பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் பாடசாலை மாணவர் மாகொலவில் உள்ள ஆண்களுக்கான நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் இறுதிப் பரீட்சைக்கு நேற்று தோற்றுவதற்காக சிறைச்சாலை அதிகாரிகளினால் குறித்த சிறுவன் பரீட்சை நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கழிவறைக்கு செல்லப் போவதாக தெரிவித்ததை அடுத்து , கழிவறைக்கு அழைத்துச் செல்லப்பட்டப்பட்ட போது சிறை அதிகாரியைத் தள்ளிவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரியவருகின்றது.
சபுகஸ்கந்த பொலிஸார் சிறுவனை கைது செய்வதற்கான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்