பரீட்சைகள் குறித்து கல்வி அமைச்சு வெளியிட்ட அறிக்கை!

2026 ஆம் ஆண்டில் நடைபெறவிருக்கும் பாடசாலை பரீட்சைகள் தொடர்பான அறிவிப்பை கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.
அதனடிப்படையில், 2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரணத் தரப் பரீட்சைகள் 2026 பெப்ரவரி 17 முதல் பெப்ரவரி 26 வரையும், 2026 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைகள் ஓகஸ்ட் 9 ஆம் திகதியும் நடைபெறவுள்ளன.
2026 க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் ஓகஸ்ட் 10 முதல் செப்டம்பர் 05 ஆம் திகதி வரையும், 2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரணத் தரப் பரீட்சைகள் 2026 டிசம்பர் 08 முதல் டிசம்பர் 17 ஆம் திகதி வரையும் இடம்பெறுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.