பரிசுகள் மற்றும் வாழ்த்துக்களோடு மஹிந்தவை சந்தித்த சீன வர்த்தகர்கள் குழு!

சீன வர்த்தகர்கள் குழு ஒன்று நேற்று வியாழக்கிழமை தங்காலையில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தனிப்பட்ட இல்லத்தில் அவரைச் சந்தித்தது.

இந்த விஜயத்தின் போது முன்னாள் ஜனாதிபதிக்கு பரிசுகளை வழங்கிய குழு, அவரது நலம் விசாரித்தது.

கொழும்பில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தை காலி செய்து தங்காலையில் குடியேறிய பின்னர், முன்னாள் ஜனாதிபதியை சந்திக்க வந்த முதல் சீன வர்த்தகர்கள் குழு இதுவாகும் என்று தெரிவிக்கப்படுகிறது.

தேயிலை ஏற்றுமதியில் ஈடுபட்டுள்ள இந்தக் குழு, வெலிகம மற்றும் நுவரெலியாவுக்குச் செல்லும் வழியில் மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்தது.