
பராமரிப்பு இல்லாததே ரயில் தடம்புரள காரணம்: ரயில்வே திணைக்களம்
ரயில் இன்ஜின்கள் மற்றும் பெட்டிகளை முறையாக பராமரிக்காததே பெரும்பாலான ரயில் தடம் புரள்வதற்கு காரணம் என, ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
பணியாளர்கள் மற்றும் உதிரி பாகங்கள் பற்றாக்குறையினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக, அதன் பிரதிப் பொது முகாமையாளர் என்.ஜே.இண்டிபோலகே தெரிவித்தார்.
இந்த ஆண்டில் இதுவரை 76 ரயில் தடம் புரண்டுள்ளதாக, ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
