
பயிற்சியின் போது 17 வயது இளம் கிரிக்கெட் வீரருக்கு நேர்ந்த துயரம்!
அவுஸ்திரேலியாவின் 17 வயது இளம் கிரிக்கெட் வீரர் ஒருவர் பயிற்சியின் போது பந்து தாக்கி உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தானியங்கி பந்துவீச்சு இயந்திரத்தை பயன்படுத்தி பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, கழுத்தில் பந்துதாக்கி அவர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மெல்போர்னில் கிளப் அணிக்காக விளையாடும் ஆஸ்டின், கடந்த செவ்வாய்க்கிழமை பெர்ன்ட்ரீ கல்லியில் வலை பயிற்சி ஈடுபட்டிருந்தார்.
இதன்போது, சக விளையாட்டு வீரர்களும் வீசிய பந்துகளை தலைக்கவசம் அணிந்து கொண்டு பயிற்சி ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது ஆனால் கழுத்து பகுதியை பாதுகாக்கும் அம்சம் அதில் இல்லை.
இந்நிலையில் துரதிர்ஷ்டவசமாக ஒரு பந்து அவருடைய கழுத்து பகுதியை பலமாக தாக்கியதாகவும் , பின்னர் அவர் கீழே வீழ்ந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனை தொடர்ந்து அவர் 2 நாட்கள் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்தநிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
 
			
