பயிரிடப்பட்டிருந்த கஞ்சா செடிகள் மீட்பு: ஒருவர் கைது
-பதுளை நிருபர்-
பதுளை – போகாஹகும்புர ஒஹிய பகுதியில் விகாரையில் பயிரிடப்பட்டிருந்த 571 கஞ்சா செடிகளை மீட்டுள்ளதாக போகாஹகும்புர பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர் 24 வயதுடைய பிக்கு என பொலிஸார் தெரிவித்தனர்.
போகஹகும்பர பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய குறித்த விகாரை பகுதியில் மேற்கொண்ட தேடுதலின் போது 6 அடி உயரமான கஞ்சா செடிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சந்தேக நபரை வெலிமடை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக போகஹகும்பர பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளை போகஹகும்பர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
