பயன்படுத்தப்படாத நிலங்களை கண்டறிந்து உணவுப் பயிர்களைப் பயிரிடுமாறு ஜனாதிபதி பணிப்புரை
பெருந்தோட்ட நிறுவனங்களுக்குச் சொந்தமான 9,000 ஹெக்டேர்களுக்கும் அதிகமான நிலங்கள் பயன்படுத்தாமல் இருப்பதாகவும், 23 நிறுவனங்களுக்கு சொந்தமான அந்த காணிகளில் பயிர்ச்செய்கைக்கு ஏற்ற பயிர்களை இனங்கண்டு, அவற்றை பயிரிடுபவர்களுக்கு வழங்குமாறும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார்.
பெருந்தோட்டத்துறை எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே, ஜனாதிபதி அதிகாரிகளுக்கு இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.
மேலும், தேயிலை ஏற்றுமதியினால் நாட்டிற்குக் கிடைக்கும் அந்நியச் செலாவணி வெளிப்படைத் தன்மையுடன் பேணப்பட வேண்டும் எனவும், அதற்காக தேயிலை ஏலத்தை டொலர்களில் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து உடனடியாக ஆராயுமாறும், ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
