பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த Google Maps

 

ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவர்கள் மத்தியில் தவிர்க்க முடியாத செயலியாக Google Maps திகழ்கின்றது.

இந்தநிலையில் Google Maps பயனர்களை கவரும் வகையிலும் போட்டியை சமாளிக்கும் வகையில் அவ்வப்போது தனது புதிய அப்டேட்களை செய்து வருகிறது.

அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பாக 10 புதிய அம்சங்களை கூகுள் மேப்ஸ் அறிமுகம் செய்துள்ளது.

அதில் சில அம்சங்கள் பின்வருமாறு:

* கூகுளின் ஜெமினி ஏஐயுடன் மேப்ஸ் தற்போது நேரடியாக ஒருங்கிணைப்பதால், பயனர்கள் தங்கள் தொலைபேசியை தொடாமல் நிகழ்நேர உரையாடல்களில் ஈடுபட முடியும்.

* கூகுள் மேப்ஸ் இப்போது சாலையில் ஏற்படும் போக்குவரத்து தடைகள், மாற்றுப்பாதைகள், கட்டுமானம் குறித்த தகவல்களையும் வழங்க ஆரம்பித்துள்ளது.

* மேலும் மோட்டார் சைக்கிள் செலுத்துபவர்களுக்கு கூகுள் மேப்ஸ் புதிய Avatar வசதியை வழங்கியுள்ளது.

* சில குறிப்பிட்ட நகரங்களில் உள்ள பயனர்கள், கூகுள் மேப்ஸ் மூலம் நேரடியாக மெட்ரோ ரெயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.

* விபத்து ஏற்படக்கூடிய பகுதிகளை நெருங்கும்போது பயனர்களை கூகுள் மேப்ஸ் இப்போது முன்கூட்டியே எச்சரிக்கும்.