
பயணிகளின் நகைகளை திருடிய கர்ப்பிணிப் பெண்கள்
பேருந்துகளில் பயணிப்போரின் பணப்பைகள் தங்க ஆபரணங்களை திருடி சென்ற கர்ப்பிணிப் பெண்களை உள்ளடக்கிய 3 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தம்புத்தேகம குடாகம மற்றும் புலத்சிங்கள வீதி இங்கிரிய பிரதேசங்களில் வசிக்கும் 20இ23 மற்றும் 30 வயதுடைய இரண்டு கர்ப்பிணிப் பெண்கள் உட்பட மூன்று பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பில் இருந்து தம்புத்தேகம ஊடாக அனுராதபுரம் நோக்கி பயணித்த தனியார் பேருந்தில் பயணித்த பெண் தனது நகையை யாரோ பேருந்துக்குள் திருடிச் சென்றுள்ளதாக தெரிவித்ததையடுத்துஇ பேருந்தை அனுராதபுரம் பொலிஸ் தலைமையகத்திற்கு கொண்டு சென்று சோதனையிட்ட போது சந்தேகநபர்கள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஒரு இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான ஹெரோயின் மற்றும் இரண்டு இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் இவர்களிடம் இருந்து மீட்கப்பட்டதாகவும் திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குறித்த பெண்கள் உள்ளிட்ட பெண்களின் குழுக்கள் நாடளாவிய ரீதியில் பல திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
