
பயங்கரவாத தடை சட்டத்தை நீக்குவோம் என்று கூறியவர்கள் அதே சட்டத்தை பயன்படுத்தி 3 பேரை கைது செய்துள்ளனர்: ஜனா தெரிவிப்பு
ஜனாதிபதி தேர்தலின் போது பயங்கரவாத தடை சட்டத்தை நீக்குவோம், அரசியல் கைதிகளை விடுதலை செய்வோம், காணாமல் போனோருக்கான நீதியை பெற்றுத்தருவோம் என்று கூறியவர்கள் இன்று அதே பயங்கரவாத தடைச் சட்டத்தை பயன்படுத்தி 3 தமிழர்களை கைது செய்துள்ளனர் என தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரன் (ஜனா) தெரிவித்தார்.
மட்டக்களப்பு நகரில் அவரது இல்லத்தில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இதன் போது அவர் தெரிவிக்கையில்,
“தேசிய மக்கள் சக்தியின் செயலாளர் ரில்வின் சில்வா நேற்று ஞாயிற்றுக்கிழமை தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு நேர்காணல் வழங்கியிருந்தார். அதில் 13ஆவது திருத்தச்சட்டத்தை முற்றுமுழுவதுமாக நீக்கி புதிய அரசியல் திருத்தச் சட்டத்தை உருவாக்கி மாகாண சபை முறைமையை இல்லாமல் செய்வதற்கான திட்டங்களை தாங்கள் வகுத்துக்கொண்டிருப்பதாகவும் இலங்கை இந்திய ஒப்பந்தம் என்பது இலங்கை மக்களின் விருப்பத்திற்கு மாறாக இந்தியாவால் திணிக்கப்பட்டது என்றும் கூறியிருந்தார்.
ரில்வின் சில்வா ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் 1987 ஆம் ஆண்டு 13ஆவது திருத்தச்சட்டத்தை அரசியல் அமைப்பிலே கொண்டு வரும் பொழுது 6/5 பெரும்பான்மையை கொண்ட ஜே.ஆர்.ஜெயவர்தன பாராளுமன்றத்தின் ஊடாகவே நிறைவேற்றினார். அப்படி இருக்கையில் இது இலங்கை மக்களின் விருப்பத்திற்கு மாறானது என்று தெரிவிப்பது போலியானது.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போதோ, பாராளு மன்ற தேர்தலின் போதோ தேசிய மக்கள் சக்தி எனப்படும் ஜே.வி.பி வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக எதுவிதமான தீர்வு திட்டங்களை பற்றியும் கூறவில்லை என்று தெரிவித்திருந்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
