
பப்ஜி (Pubg)யால் பறிபோன உயிர்!
பப்ஜி கேமினால் பணத்தை இழந்த இளைஞர் ஒருவர் தொடர்பில் செய்தி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
யாழ் உரும்பிராயைச் சேர்ந்த சிவகுமார் அகீபன் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடந்த 28 ஆம் திகதி உயிரை மாய்க்க முயன்ற இளைஞனை வீட்டார் மீட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் இளைஞன் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று வியாழக்கிழமை உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞன் Pubg விளையாட்டில் பெருமளவு பணத்தை செலவிட்டதாகவும் இதன் காரணமாக கடன் பிரச்சினை ஏற்பட்டு இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகின்றது.
இவர் மீட்டர் வட்டிக்கு கடன் வாங்கியிருந்ததாக கூறப்படுகின்றது.
அண்மையில் கிரிப்டோ விவகார இளைஞர் மரணத்திலும் கடனே பிரதான காரணியாக இருந்த நிலையில் இச்சம்பவமும் பதிவாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
