பன்னீர்செல்வம் அ.தி.மு.க பொருளாளர் பதவியிலிருந்து நீக்கம்?

அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் பொருளாளர் பதவியிலிருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்படவுள்ளதாக தமிழக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒற்றைத் தலைமை விவகாரத்தினால் ஓ.பன்னீர்செல்வம்  மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பினடைக்கிடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கட்சி உறுப்பினர்களுக்கிடையிலான கூட்டமொன்று இன்று திங்கட்கிழமை நடைபெறுகின்றது.

குறித்த கூட்டத்தின் போது, ஓ.பன்னீர்செல்வத்தை அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் பொருளாளர் பதவியிலிருந்து நீக்குவதற்கான தீர்மானமொன்று நிறைவேற்றப்படவுள்ளதாகவும், அதேநேரம் புதிய பொருளாளராக கே.பி.முனுசாமி தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாகவும், தகவல் வெளியாகியுள்ளது.