பனை விருத்திக்கு பாதிப்பாக அமையும் சீமை கருவேலமரங்களை அழிப்பதற்கு நடவடிக்கை

-யாழ் நிருபர்-

பனைமர விருத்திக்கு பாதிப்பாக அமையும் சீமைக்கருவேலமரங்களை அழிப்பதற்கு அவற்றின் அடர்த்தி மற்றும் பரப்பளவு என்பன குறித்த தரவுகள் சேகரிக்கப் படுகின்றன என ஊர்காவற்றுறைப் பிரதேச செயலர் தெரிவித்துள்ளார்.

சீமைக்கருவேலமரங்கள் பனைமரங்களுக்கு பாதிப்பாக அமைகின்றன . அவற்றை அழித்து பனை வளத்தை பெருக்குவதற்கு ஊர்காவற்றுறை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. தற்போது சீமைக்கருவேலமரங்கள் குறித்த தரவுகள் திரடப்படுகின்றன.

பனைமரங்கள் தனியார் காணிகளில் உள்ளன. பெரும்பாலான காணி உரிமையாளர்கள் வெளிநாடுகளில் வசிப்பதால் குறித்த நடவடிக்கைளை மேற்கொள்வதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளன. வெகுவிரைவில் இதற்கான அனைத்துப் பணிகளும் ஆரம்பிக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்