பனை அபிவிருத்தி சபையின் ஆராய்ச்சிக்கூடத்தை பார்வையிட்ட கனேடிய தூதுவர்

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான கனேடிய தூதுவர் எரிக் வோல்ஸ் நேற்று செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம், கைதடியில் அமைந்துள்ள பனை அபிவிருத்தி சபையின் ஆராய்ச்சிக்கூடத்தை பார்வையிட்டார்.

மேலும் பனை அபிவிருத்தி சபையினுடைய எதிர்கால செயற்பாடுகள், புதிய பனைசார் உற்பத்திப் பொருட்கள் கண்டுபிடிப்புக்கான நிதிஉதவிகள் தொடர்பாகவும் இதன்போது ஆராயப்பட்டது.

இதன்போது பனை அபிவிருத்திச் சபையின் தலைவர், உதவிப் பணிப்பாளர், சந்தைப்படுத்தல் முகாமையாளர்  மற்றும் உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்