
மட்டு.கோட்டைக்கல்லாற்றில் “பனியும் தண்டனையும்” நூல் வெளியீட்டு நிகழ்வு
கலாநிதி கல்லாறு சதீஸ் எழுதிய “பனியும் தண்டனையும்” எனும் புலம்பெயர் சிறுகதைகள் நூல் வெளியீட்டு நிகழ்வு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலயத்தில் எதிர்வரும் 5 ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 5 மணிக்கு இடம்பெறவுள்ளது.
இந்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக பதிப்பாளரும் , திரைப்படத் தயாரிப்பாளருமான மு.வேடியப்பன் (சென்னை) கலந்து கொள்ளவுள்ளார்.
