பத்து வாள்களுடன் ஒருவர் கைது
மாத்தறை – தெய்ந்தர, அதபத்துகந்த பிரதேசத்தில் வீடொன்றில் மறைத்து வைத்திருந்த 10 வாள்களுடன் நபர் ஒருவர் நேற்று செவ்வாய்க்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெய்ந்தர பொலிஸார் தெரிவித்தனர்.
அதபத்துகந்த, டீயெந்தர பிரதேசத்தை சேர்ந்த 62 வயதுடையவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்களென பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, கிவாசக பிரதேசத்தில் உள்ள படுக்கையறையொன்றில் படுக்கைக்கு அடியில் 2.5 அடி நீளம் கொண்ட பத்து வாள்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
