
பத்து வருடங்களுக்கு மேலாக சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட சந்தேக நபர் கைது
யாழ்ப்பாணம் – வடமராட்சி, பருத்தித்துறை பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற சந்தேகத்திற்கிடமான இரண்டு டிப்பர் வாகனங்களையும் அதன் சாரதிகளையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நேற்று சனிக்கிழமை இரவு விசேட அதிரடி படையினர் மேற்கொண்ட சோதனையின் போதே குறித்த சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக குறித்த பகுதிகளில் சட்டவிரோத மணல் அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த நபரது டிப்பர் வாகனமே காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டதாக தெரியவந்துள்ளது.
கைப்பற்றப்பட்ட டிப்பர் வாகனங்களில் ஒன்று உரிய அனுமதி பத்திரங்களுடன் இருந்ததினால் டிப்பர் வாகனமும் அதன் சாரதியும் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
