பதுளை பொது வைத்தியசாலையை போதனா வைத்தியசாலையாக மாற்றுவதற்கான வேலைத்திட்டம்

பதுளை பொது வைத்தியசாலை போதனா வைத்தியசாலையாக மாற்றுவதற்கான வேலைத்திட்டங்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்டதுடன், 10 மாடி கட்டிடம் ஒன்றினை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வும் துறைமுகங்கள் மற்றும் மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபாத டி சில்வா தலலைமையில்   நடைபெற்றது.

பதுளை மாகாண பொது வைத்தியசாலையை போதனா வைத்தியசாலையாக மாற்றியமைத்து ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தில் புதிதாக நிறுவப்பட்ட மருத்துவ பீட மாணவர்களுக்கு மருத்துவப் பயிற்சிகளை வழங்குவதற்காக இந்த பத்து மாடிக் கட்டிடத்தை நிர்மாணிக்க முன்மொழியப்பட்டுள்ளது.

துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம்.முசம்மில், இராஜாங்க அமைச்சர்களான சாமர சம்பத் தசநாயக்க, அரவிந்த குமார் மற்றும் அமைச்சர்கள், சுகாதார பணிப்பாளர் நாயகம் கலாநிதி அசேல குணவர்தன, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க, ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் வேந்தர் பேராசிரியர் ஜயந்த பாலவர்தன, ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் கோலித பண்டார விஜேசேகர, பதுளை போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் உபுல் கருணாரத்ன மற்றும் வைத்தியர்கள், அரச அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்