பதுளை பொது வைத்தியசாலைக்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டம்
-பதுளை நிருபர்-
பதுளை பொது வைத்தியசாலைக்கு முன்பாக இன்று செவ்வாய்க்கிழமை பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
அரச மருத்துவமனைகளில் அத்தியாவசிய மருந்துகள் பிற மருத்துவ உபகரணங்கள் பற்றாக்குறை உள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உதவி செயளாலர் டாக்டர் பாலித ராஜபக்ஷ கடந்த காலங்களில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார் என அவருக்கு எதிராக சுகாதார அமைச்சு ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ள எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு எதிராக குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
பதுளை பொது வைத்தியசாலையின் வைத்தியர்கள், தாதியர்கள், பதுளை சிவில் அமைப்புக்கள் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
