பதுளை-செங்கலடி பிரதான வீதி : இரவில் மூடி அதிகாலை திறக்க நடவடிக்கை

-பதுளை நிருபர்-

மண்சரிவின் காரணமாக பதுளை செங்கலடி பிரதான வீதியில் பசறை 13 ம் கட்டை பகுதியில் கடந்த 18 ம் திகதி ஏற்பட்ட வீதி போக்குவரத்து முற்றாக தடைப்பட்டிருந்தது.

பின்னர் கடந்த 24 ம் திகதி மதியம் 12.00 மணியளவில் வீதி அபிவிருத்தி அதிகாரசபை ஊழியர்களினால் கற்கள் அப்புறப்படுத்தப்பட்டு அவ்விடத்தில் போக்குவரத்து ஒற்றை வழி போக்குவரத்தாக மட்டுப்படுத்தப்பட்டது.

இருப்பினும் அன்று முதல் தொடர்ந்தும் காலை 6.30 மணிக்கு வீதி திறக்கப்பட்டு மாலை 6.00 மணிக்கு மீண்டும் வீதியை மூடுவது என தீர்மானிக்கப்பட்டிருந்தது.

அதேபோல் குறித்த வீதி தினமும் மாலை 6.00 மணிக்கு மூடப்பட்டு காலை 6.30 மணிக்கு திறக்கப்பட்டது.

தற்மக்கள் நலன் கருதி குறித்த வீதியை இன்று திங்கட்கிழமை முதல் இரவு 10.00 மணிக்கு மூடி காலை 5.30 மணிக்கு திறப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்