பதுளை – செங்கலடி பிரதான வீதியில் பாரிய மண்சரிவு!

 

பதுளை – செங்கலடி பிரதான வீதியின் பசறை – 13 ஆம் கட்டை பகுதியில் பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக குறித்த வீதியுடனான போக்குவரத்து முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது

இந்தநிலையில்,  மண்சரிவினை அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

இதன்போது பாரிய கற்களும் மரங்களும் வீதியில் சரிந்து வீழ்ந்துள்ளது