பதுளை சசெக்ஸ் கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி
பதுளை சசெக்ஸ் கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டி நிகழ்வானது பதுளை சசெக்ஸ் கல்லூரியின் முதல்வர் பிரிக்கேடியர் ஜெ.எம்.சி.ஜெயவீர தலைமையில் பதுளை கால்பந்தாட்ட மைதானத்தில் நடைபெற்றது.
ஹார்வர்ட், ஸ்டான்போர்ட், மற்றும் கேம்பிரிஜ் ஆகிய மூன்று இல்லங்களை சேர்ந்த மாணவர்களும் தமது திறமைகளை வெளிப்படுத்தி போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பாடசாலையின் இல்ல விளையாட்டு போட்டியின் அதிதிகளாக ஆரம்ப நிகழ்வில் இலங்கையின் முன்னாள் கால்பந்தாட்ட வீரர் நிமல் விக்ரமதுங்க, இறுதி நிகழ்வில் ஆசிய விளையாட்டு போட்டிகளில் 5000 மற்றும் 10000 மீற்றர் ஓட்டங்களில் தங்கப்பதக்கத்தை வென்ற இலங்கையின் தலை சிறந்த ஓட்ட வீராங்கனையும் ஒலிம்பிக் ஓட்ட வீராங்கனையுமான எஸ்.எல்.பி. ரோசா, ஆசிய விளையாட்டுக்கள் மற்றும் கொமன்வெல்த் விளையாட்டுக்களின் வர்ண நாயகன் சசெக்ஸ் கல்லூரி வலையமைப்பின் பிரதி விளையாட்டுத்துறை தலைவர் ரூவான் பெரேரா இந்த நிகழ்வில் அதிதிகளாக கலந்து கொண்டு சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.














Beta feature

