பதுளையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்புமனு தாக்கல்

பதுளை மாவட்டத்தில் உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்பு மனுவை, இன்று வியாழக்கிழமை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் தலைமையில் தாக்கல் செய்யப்பட்டது.

பதுளை மாவட்டத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஹாலிஎல, சொர்னாதொட்ட, மீஹாகுல்ல, பண்டாரவளை, எல்ல, வெலிமடை, ஊவா பரனகம ஆகிய இடங்களில் சேவல் சின்னத்திலும், பதுளை பசறை,ஹப்புதலை, ஹல்துமுல்ல ஆகிய இடங்களில் ஐக்கிய மக்கள் சக்கிதியுடன் கூட்டினைந்து டெலிபோன் சின்னத்திலும் உள்ளூராட்சிமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளது.