
பதுக்கி வைக்கப்பட்டிருந்த 150 லீற்றர் டீசலுடன் சந்தேகநபர் கைது
கொச்சிக்கடை, தலுவகொட்டுவ பகுதியில் சட்டவிரோதமான முறையில் டீசலை வைத்திருந்த 35 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
மன்னார் – கொழும்பு பிரதான வீதியில் அமைந்துள்ள கொச்சிக்கடை நேற்று பிரிவிற்குட்பட்ட தலுவகொட்டுவ பகுதியில், நீர்கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட விசேட சோதனையின் போதே இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
நீர்கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட இந்த சுற்றிவளைப்பின் போது, உரிய அனுமதிப்பத்திரங்கள் இன்றி விற்பனைக்காகவோ அல்லது களஞ்சியப்படுத்தவோ வைக்கப்பட்டிருந்த 150 லீற்றர் டீசல் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக நீர்கொழும்பு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நீர்கொழும்பு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
