பதில் ஜனாதிபதி சற்றுமுன்னர் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்
பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதில் ஜனாதிபதியாக, பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் சற்றுமுன்னர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
இதேவேளை, தற்போது முதல், புதிய ஜனாதிபதியைத் தெரிவுசெய்வதற்கான அரசியலமைப்பு ரீதியான நடைமுறை இடம்பெறும்.
அந்த நடைமுறை நிறைவடையும் வரையில், ஜனாதிபதி பதவியின் அதிகாரங்கள், செயற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்கும், நிறைவேற்றுவதற்கும் அரசியலமைப்புக்கு அமைய, பிரதமர் செயற்படுவார்.
புதிய ஜனாதிபதி தெரிவானது, கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் அனைத்துக் கட்சிகளின் தலைவர்களுக்கு தாம் அறியப்படுத்தியதற்கு அமைய, இடம்பெறும் என சபாநாயகர் அறிவுத்துள்ளார்.
