பதவி விலக தீர்மானித்துள்ள 8 இராஜாங்க அமைச்சர்கள்

இராஜாங்க அமைச்சர்களாக பதவி வகிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 8 பேர் அந்தப் பதவிகளை விட்டு விலகத் தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இராஜாங்க அமைச்சர்கள் டி. வி சானக, தேனுக விதானகமகே, ஷசீந்திர ராஜபக்க்ஷ அசோக பிரியந்த, மொஹான் டி சில்வா, இந்திக்க அனுருத்த, பிரசன்ன ரணவீர மற்றும் சிறிபால கம்லத் ஆகியோர் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்கப் போவதில்லை என தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசாங்கத்துக்கு ஆதரவளிக்காமல் இராஜாங்க அமைச்சர்கள் பதவிகளில் நீடிப்பது நெறிமுறையல்ல என அரசாங்கத்தின் பல உறுப்பினர்கள் கடந்த காலங்களில் சுட்டிக்காட்டியிருந்தனர்.

எவ்வாறாயினும், அந்த இராஜாங்க அமைச்சர்களின் பதவிகள் தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்க அரசாங்கம் இதுவரை தீர்மானிக்கவில்லை என தெரிய வந்துள்ளது

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்