பதவி விலகினார் சரத் பொன்சேகா

நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பதவியில் இருந்து விலகியுள்ளார் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சி அலவத்துவல தெரிவித்துள்ளார்.

சரத் பொன்சேகா இன்று வெள்ளிக்கிழமை விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்தச் செய்தி வெளியாகியுள்ளது.

சரத் பொன்சேகா எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிடுவதற்காக கட்டுப்பணம் செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்