பண வரவை அள்ளப்போகும் ராசிக்காரர்கள்
🎈ஜோதிட சாஸ்திரத்தின் படி அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசியை மாற்றுகின்றன. இந்த மாற்றம் கிரக பெயர்ச்சி என அழைக்கப்படுகிறது.
🎈அந்த வகையில் ஜூன் 15ஆம் திகதியான இன்று சூரியன் பெயர்ச்சியில் சூரியன் ரிஷப ராசியிலிருந்து மிதுன ராசியில் பெயர்ச்சியாவார்.
🎈சூரியன் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நன்மைகள் ஏற்படும். இவர்களுக்கு ஆக்கப்பூர்வமான பலன்கள் கிடைக்கும்.
🎈இந்த கிரகப்பெயர்ச்சிகளின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். சில ராசிகளில் இவற்றால் சுப விளைவுகளும் சில ராசிகளில் பிரச்சனைகளும் ஏற்படலாம்.
🎈அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவு இருக்கும். பண வரவு அதிகமாகும். அந்த வகையில் எந்த ராசியினருக்கு என்ன பலன் என நாம் இங்கு பார்ப்போம்.
மேஷம்
🌐சூரியன் பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு விசேஷமான பலன்களை கொண்டு வரும். பொருளாதார நிலையும் மேம்படும். செலவுகள் குறையும். முதலீட்டின் மூலம் லாபம் அடையலாம். புதிய வேலைகளை தொடங்க இது சரியான நேரமாக இருக்கும். எதிர்பாராத இடங்களில் இருந்து லாபம் உண்டாகும். வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வசதிகள் பெருகும். பணியிடத்தில் உங்கள் உழைப்புக்கான பலன் கிடைக்கும். ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது. இந்த நேரம் உங்களுக்கு ஒரு வரப் பிரசாதமாக இருக்கும்.
மிதுனம்
🌐மிதுன ராசிக்காரர்களுக்கு சூரியன் பெயர்ச்சி பலவித நன்மைகளை அளிக்கும். நிதி சிக்கல்கள் நீங்கும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். உங்கள் நிதிநிலை மேம்படும். தடைப்பட்டிருந்த காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக நடந்து முடியும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். நினைத்தது நடக்கும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். தேர்வு முடிவுகள் நன்றாக வரும். பண வரவு அதிகமாகும். பணியிடத்தில் மேலதிகாரிகளின் முழுமையான ஆதரவு கிடைக்கும். அனைத்து துறைகளிலும் வெற்றி கிடைக்கும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.
சிம்மம்
🌐சிம்ம ராசிக்காரர்களுக்கு சூரியனின் பெயர்ச்சி லாபகரமானதாக இருக்கும். மாத வருமானம் கூடும். பொருளாதார நிலை மேம்படும். வீடு வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கும் சிம்ம ராசிக்காரர்களுக்கு இப்போது லாபம் அதிகரிக்கும். சூரியனின் விசேஷ அருளைப் பெறுவீர்கள். புதிய பணிகளை இப்போது தொடங்கலாம். ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். நீங்கள் எதிர்பார்த்த பணிகளை செய்ய உங்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்கும்.
பண வரவை அள்ளப்போகும் ராசிக்காரர்கள்
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்