பண பரிமாற்ற தன்னியக்க இயந்திரங்கள் பழுதால் மக்கள் அவதி

-மஸ்கெலியா நிருபர்-

கொட்டகலை நகரில் உள்ள அரச வங்கிகளில் இன்று பண பரிமாற்ற தன்னியக்க இயந்திரங்கள் பழுதடைந்த நிலையில் மக்கள் அவதி.

கொட்டகலை நகரில் உள்ள அரச மக்கள் வங்கி மற்றும் இலங்கை வங்கிகளில் பணம் பரிமாற்றம் செய்யும் இயந்திரங்கள் பழுதடைந்த நிலையில் உள்ளது இதன் காரணமாக தலைநகரில் இருந்த வந்த இளைஞர் யுவதிகள் மற்றும் வங்கி வாடிக்கையாளர்கள் பாரிய அளவில் சிரமத்தை எதிர் கொள்கின்றனர்.

இது குறித்து வாடிக்கையாளர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில் கொட்டகலை நகரில் உள்ள அரச வங்கிகளில் இரண்டிலும் பண பரிமாற்ற இயந்திரங்கள் பழுதடைந்த நிலையில் உள்ளதால் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாட்டின் பல பகுதிகளில் இருந்து வரும் வாடிக்கையாளர்கள் பாரிய இன்னலுக்கு முகம் கொடுக்க நேரிட்டது எனவும் அருகில் உள்ள தனியார் வங்கிகளை நாடியதாகவும் வருடத்தில் ஒரு மாதம் கூட முறையாக அரச வங்கிகளில் உள்ள பண பரிமாற்ற இயந்திரங்கள் இயங்குவது இல்லை எனவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்தி புதிய பண பரிமாற்ற இயந்திரங்கள் பொருத்த முன் வர வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.