
பண்டிகை காலம் : முட்டை விலை வேகமாக அதிகரிப்பு
பண்டிகை காலம் நெருங்கி வருவதால் முட்டை விலை கணிசமாக உயர்ந்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் 42 முதல் 45 ரூபா வரையில் விற்பனை செய்யப்பட்ட வெள்ளை முட்டை ஒன்றின் விலை தற்போது 50 ரூபாவை தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிவப்பு நிற முட்டை ஒன்று 53 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
வெள்ளை முட்டை 50 ரூபாவிற்கும் சிவப்பு முட்டை 52 ரூபாவிற்கும் விற்பனை செய்யுமாறு அகில இலங்கை முட்டை வியாபாரிகள் சங்கம் நேற்று வெள்ளிக்கிழமை முட்டை மொத்த வியாபாரிகளுக்கு அறிவித்தது.
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நெருங்கி வருவதால் முட்டைகளுக்கு வழக்கத்தை விட அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளது.
முட்டை விலை உயர்வுடன் கேக் உள்ளிட்ட முட்டை சம்பந்தப்பட்ட பொருட்களின் விலையும் உயரும்.
டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் முட்டை விலை அதிகரிப்பது வழமை என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் பொருளாளர் விஜய அல்விஸ் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் முட்டை விலை அதிகரிக்கப்படாது என முட்டை உற்பத்தியாளர் சங்கத் தலைவர் ஆர்.எம். சரத் ரத்நாயக்க முன்னதாக தெரிவித்திருந்தார்
