பண்டிகை காலத்தை முன்னிட்டு நாளை முதல் மேலதிக பேருந்துகள் சேவையில்!

எதிர்வரும் பண்டிகைக் காலத்திற்கு இணையாக விஷேட பேருந்து சேவைகளை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொதுமுகாமையாளர் பண்டுக ஸ்வர்ணசிங்ஹ தெரிவித்துள்ளார்.

இதன்படி, பண்டிகை காலத்தை முன்னிட்டு மேலதிகமாக ஐம்பது பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்தவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பேருந்து சேவைகள் நாளை செவ்வாய்க்கிழமை முதல் இடம்பெறவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.