பண்டிகை காலத்தில் பாதுகாப்புடன் செயற்படுமாறு பொது மக்களுக்கு அறிவிப்பு!

பண்டிகை காலத்தில் சுகாதார பாதுகாப்பு தொடர்பில் அதிக கவனத்துடன் செயற்படுமாறு பொதுமக்கள் கோரப்பட்டுள்ளனர்.

பட்டாசு கொளுத்துதல்,வாகனம் செலுத்துதல் போன்ற செயற்பாடுகளின் போது கவனத்துடன் செயற்படுமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடக பேச்சாளர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

தமிழ், சிங்கள புதுவருட கொண்டாட்டத்தின் போது பட்டாசுகளால் ஏற்பட்ட அனர்த்தங்கள் குறைந்தளவிலேயே பதிவாகியிருந்ததாகவும் சமில் விஜேசிங்க கூறினார்.

இதேவேளை பட்டாசு கொளுத்தும் சிறுவர்கள் மிகவும் கவனத்துடன் செயற்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்

அதேநேரம், கவனயீனமாக வாகனம் செலுத்தல், அதிவேகம், மதுபோதையில் வாகனம் செலுத்தல் போன்ற குற்றச்செயல்கள் தவிரக்கப்பட வேண்டும் என்றும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடக பேச்சாளர் சமில் விஜேசிங்க அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்