பண்டிகை காலத்தில் சாரதிகளுக்கு விசேட அறிவிப்பு

பண்டிகைக் காலத்தில் போக்குவரத்துச் சட்டங்களை மீறும் சாரதிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை சாலைப் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்துக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் இந்திக ஹபுகொட தெரிவித்துள்ளார்.

குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களைக் கைது செய்யும் நடவடிக்கைகளுக்காக நாடு முழுவதும் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு ஒரு லட்சத்து ஐம்பதாயிரம்இ மூச்சுப் பரிசோதனை கருவிகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க