பண்டிகையை முன்னிட்டு இந்துமத கைதிகளை பார்வையிட அனுமதி

தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறைச்சாலைகளில் உள்ள இந்துமத கைதிகளை பார்வையிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகச் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சிறைச்சாலைகளில் உள்ள இந்துமத கைதிகளை நாளையதினம் திங்கட்கிழமை பார்வையிட வரும் உறவினர்களால் கைதியொருவருக்கு தேவையான அளவு, உணவுப் பொருட்கள் மற்றும் இனிப்புகளை எடுத்து வர முடியும் என சிறைச்சாலைகள் ஆணையாளரும் பேச்சாளருமான காமினி பி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அனைத்து சுகாதார வழிகாட்டுதல்கள் மற்றும் சிறைக்கைதிகள் பார்வையிடும் விதிமுறைகளுக்கு அமைய நாட்டில் உள்ள சிறைச்சாலைகளில் சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்