பண்டாரவளை சதொச நிலையத்தில் தீ பரவல்

பண்டாரவளை, தர்ம விஜய மாவத்தையின் பழைய வணிக வளாகத்தில் அமைந்துள்ள சதோச வணிக மையத்தில் இன்று திங்கட்கிழமை அதிகாலை 4 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது.

தீ விபத்தினால் சதோச நிலையம் முற்றாக சேதமடைந்துள்ளதாக பண்டாரவளை பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் பண்டாரவளை பொலிஸார் மற்றும் நகர சபையினரும் இணைந்து தீயை கட்டுப்படுத்தியதுடன், தீ ஏனைய கடைகளுக்கு பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இவ்விபத்தில் ஏற்பட்ட சேதம் இன்னும் கணக்கிடப்படவில்லை எனவும் தீ விபத்துக்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பண்டாரவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்