பண்டாரகம பகுதியில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி

பண்டாரகம, பொல்கொட பாலத்திற்கு அருகில்  இன்று  வியாழக்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் காரில் பயணித்த ஒருவரை குறிவைத்து T-56 துப்பாக்கியால் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.