பணியில் ஈடுபட்டிருந்த பெண் ரயில்வே பாதை பாதுகாவலரிடம் மர்ம நபர் அத்து மீறல்
இந்தியாவில் தென்காசி மாவட்டம் பாவூர்த்திரத்தில் எப்போதும் ஆள் நடமாட்டமும், போக்குவரத்தும் இருக்கும் பிரதான வீதியில் ரயில்வே கேட்டில் ரயில் பாதை பாதுகாவலராக பணிபுரிந்து வந்த பெண் ஊழியர் நேற்றிரவு பணியில் ஈடுபட்டிருந்த போது மர்ம நபர் ஒருவர் அவரின் ரயில் பாதை பாதுகாவலர் அறைக்குள் நுளைந்து அவரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் சத்தம் போட்டதைத் தொடர்ந்து மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடியதாக கூறப்படுகிறது.
இது குறித்து பாவூர்சத்திரம் பொலிசார் மற்றும் ரயில்வே பொலிசார் வழக்குப் பதிவு செய்து ரயில்வே கேட் மற்றும் சுற்று பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.