
பணியாளர்கள் தூக்கம் : சாரதியின் சாமர்த்தியத்தால் உயிர் தப்பிய பயணிகள்!
கடமையில் கவனக்குறைவாகச் செயற்பட்டதற்காகத் ரயில் சமிக்ஞைகளைக் கையாளும் பணியாளர்கள் இருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கண்டி பிரதான ரயில் நிலையத்தில் தொடருந்து சமிக்ஞைகளைக் கையாளும் பணியாளர்கள் இருவர் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
பதுளையிலிருந்து கண்டி நோக்கிச் சென்று கொண்டிருந்த பொடிமெனிக்கே ரயில், கடமையிலிருந்தபோது இருவரும் தூங்கிவிட்டதால், கண்டி ரயில் நிலையத்தில் உள்ள 3ஆவது நடைமேடையை வந்தடைந்தது.
அந்த நேரத்தில் ரயில் சமிக்ஞைகள் உரிய முறையில் ஒளிரவில்லை.
குறிப்பிட்ட நடைமேடையில் நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு ரயிலுடன் மோதி ஏற்படவிருந்த விபத்து, ரயில் ஓட்டுநரின் திறமையால் தவிர்க்கப்பட்டது.
பின்னர் நடத்தப்பட்ட விசாரணைகளில், ரயில் சமிக்ஞைகளைக் கையாளும் பணியாளர்களின் அலட்சியத்தால் இது நிகழ்ந்துள்ளமை தெரியவந்துள்ளது.
