பணிப்புறக்கணிப்பில் இணைந்த துணை மருத்துவ நிபுணர்கள்

தபால் ஊழியர்கள் ஆரம்பித்த பணிப்புறக்கணிப்பு காரணமாக, பல்வேறு நாடுகளிலிருந்து பெறப்பட்ட ஏராளமான கடிதங்கள் மற்றும் பொதிகள் கட்டுநாயக்க விமான நிலைய சரக்கு முனையத்தில் குவிந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் , 19 கோரிக்கைகளை முன்வைத்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்குத் தபால் தொழிற்சங்கங்களால் தொடங்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு இன்னும் தொடர்கிறது.

புணிப்புறக்கணிப்பை எதிர்கொண்டு தங்கள் தேவைகளை நிறைவேற்ற முடியாததால் மக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொள்கின்றனர்.

தபால் சேவையைக் கருத்தில் கொண்டு பணிக்கு வருமாறு தபால் மா அதிபர் ருவான் சத்குமார பணிப்புறக்கணிப்பு செய்பவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதற்கிடையில், மேல் மாகாண சபையின் கீழ் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் உள்ள துணை மருத்துவ நிபுணர்கள் இன்று காலை 8 மணி முதல், தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளதாக நிறைகாண் மருத்துவ தொழில் வல்லுநர் ஒன்றியத்தின் பொதுச் செயலாளர் சானக தர்மவிக்ரம தெரிவித்தார்.