
பணவீக்கம் அதிகரிப்பு!
2025 மே மாதத்திற்கான கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் மற்றும் கொழும்பு நகர்ப்புற சமூகத்தின் நுகர்வோர் பணவீக்க வீதம் ஆகியவை வௌியிடப்பட்டுள்ளன.
அதன்படி, மே மாதத்துக்கான கொழும்பு நகர்ப்புற சமூகத்தின் நுகர்வோர் பணவீக்க வீதம் – 0.7% ஆக உயர்ந்துள்ளது.
இது 2025 ஏப்ரலில் -2.0% ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.
உணவுப் பணவீக்கமானது, 2025 ஏப்ரலில் 1.3 சதவீதத்திலிருந்து 2025 மே மாதம் 5.2 சதவீதமாக உயர்வடைந்துள்ளது.